டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9ம் தேதி ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஜூன் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9ம் தேதி முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். ஜூன் 6ல் ஆய்வு செய்வதாக இருந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக முதலமைச்சரின் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், டெல்டாவில் 9ம் தேதி முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்கிறார். ஜூன் 8ம் தேதி (வியாழக்கிழமை) முதலமைச்சர் திருச்சி சென்றடைகிறார். திருச்சியில் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் ஜூன் 9ம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் ஆய்வில் ஈடுபடுகிறார். பாசனத்துக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்கும் நிலையில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். 10ம் தேதி மீண்டும் சென்னை வந்துவிட்டு 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் சென்று சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக முதலமைச்சரே நேரடியாக சென்று தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார்.

The post டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9ம் தேதி ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: