தைராய்டு பிரச்னைக்கு சித்தா தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானக்சா

மெக்னீசியம் – தைராய்டு சுரப்பி T4 ஹார்மோன் சுரக்க மெக்னீசியம் தேவை. T4 தேவையான அளவு சுரந்தால் தான் உடலுக்குத் தேவைப்படும் T3 ஹார்மோனாக மாற்றப்படும். ஆகவே, உணவில் மெக்னீசியம் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பில் கால்சியம் வலிமையாக சேர்வதற்கும் மெக்னீசியம் இன்றியமையாதது. இது உணவுகளில், பாதாம், வாழைப்பழம், பூசணிவிதை, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, கருப்பு சாக்லேட், ரொட்டி, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், இறைச்சி, மீன் வகைகளில் உள்ளது.

*துத்த நாகம் – மூளையின் ஹைப்போதலாமஸ் சுரக்கும் ஹார்மோன் TRH (Thyrotropin Releasing Hormone) இது சரியான அளவு சுரக்க Zinc (துத்தநாகம்) தேவை. செல்கள் சரியாக வேலை செய்ய, இன்சுலின் சுரக்க, ஆண்களில் ‘‘டெஸ்டோஸ்டீரான்\” அளவு சீராக, பளபளப்பான கருங்கூந்தலுக்கு துத்தநாகச் சத்து (Zinc) மிகவும் தேவை.

உணவு வகைகளில் கடல் சிப்பி, முந்திரிப் பருப்பு, பாதாம், வேர்க்கடலை, கொண்டக்கடலை, பூசணி விதை, கருப்பு சாக்லேட், இறைச்சி வகைகள், மீன் வகைகள், தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், மாதுளைப் பழம், கொய்யா, பெர்ரி வகைப் பழங்கள் இவைகளில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.

*Goitrogenic foods – இது தைராய்டு சுரப்பி T3, T4 ஹார்மோன்களை சரியாக சுரப்பதைத் தடுக்கிறது. மேலும், பிட்யூட்டரி சுரக்கும் TSH ஹார்மோன் அளவை அதிகப்படுத்திவிடுகிறது. ஆகவே தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சிகிச்சை காலங்களில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, Turnip, Radish போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நலம். ஏனெனில், இக்காய்கறிகளில் உள்ள ஐசோபிளேவோன்கள் (Isofavones) தைராய்டு சுரப்பியில் உள்ள TPO-வின் வேலையைத் தடுக்கும். ஐசோபிளேவோன்கள் எனப்படும் சோயா வகை உணவுகளை ஹைபோதைராய்டிசம் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இயற்கையில் இவை மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளாக இருப்பினும், தைராய்டு நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த Cruciferous vegetables நல்ல ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் தன்மையுடையது.

*ஆரோக்யமான உணவுப் பழக்கத்தில், காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு நேர Fasting-யை முடிப்பதால் தான், காலை உணவுக்கு Breakfast என்று பெயர். ஆகவே, காலை உணவை கட்டாயமாக 7.30 முதல் 8.30 மணிக்குள் முடிப்பது மிகச்சிறந்தது. காலை உணவில் வரகு, சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம் இவைகளில் ஏதாவது ஒரு கஞ்சி, பயறு, கடலை, துவரை, உளுந்து, காராமணி, மொச்சை, எள்ளு இவைகளில் ஒன்றை சாப்பிடவேண்டும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையே நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, ஆப்பிள், மாதுளை, பிளாக் காபி, பிளாக் டீ இவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*மத்தியான உணவில் ஏதாவது ஒரு கீரை வகை, முருங்கைக் கீரை, தாளிக் கீரை, பசலைக் கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, மணலிக் கீரை, பண்ணைக் கீரை, பொன்னாங்கண்ணி, தூதுவளை, வல்லாரை கீரை, புளியாரை, புளிச்சக் கீரை, பாலக் கீரை, கருவேப்பிலை எடுத்துக் கொள்ள வேண்டும். கிழங்குகளில் (மரவள்ளி, சர்க்கரை வள்ளி, சிறுகிழங்கு, கருணை, சேனை கிழங்கு) ஏதேனும் ஒன்றையும், அரிசி சாதம், மோர், தயிருடன் உண்ணவேண்டும்.

காய்கறிகளில் புடலை, அவரை, பீன்ஸ், கத்தரி, பூசணி, வெள்ளரி, வெண்டைக்காய், கோவைக்காய், கொத்தவரை, வாழைப்பூ இவைகளில் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மத்தியான உணவை 1-2 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவில் முட்டை, மீன், இறைச்சி வகைகளில் ஏதேனும் ஒன்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

*மாலைநேரம் டீ, காபி, சூப் இவற்றுடன், ஆரோக்கியமான வேகவைத்த சிவப்புக் கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை இவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

*இரவு உணவை 7.30 முதல் 8.30 மணிக்கு உள்ளாக எடுப்பது நல்லது. இரவில் அரைவயிறு உணவும், கால் வயிறு நீர், நீராகாரம் எடுத்துக்கொள்ளவேண்டும். முழு வயிறு சாப்பிடக்கூடாது. இரவு உணவு உண்டபின் ஒரு குறுநடை முக்கியம்.

எளிதில் சீரணமாகும் இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் அல்லது கோதுமை வகை உணவுகளை உட்கொள்ளவேண்டும். இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் பாலில் மஞ்சள், மிளகு கலந்து குடிக்கலாம்.

*காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சிறிதுநேரம் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். யோகாசனங்களில் சர்வாங்க ஆசனம், ஹலாசனம், சிரசாசனம், யோக முத்திராசனம் போன்றவற்றை செய்யலாம்.

*சீதா மர இலைகள் இரண்டு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காலை, மாலைகளில் குடிக்கலாம்.

*அன்னபேதி செந்தூரம், பவள பற்பம், குக்குலு சேர்ந்த மருந்துகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

*சித்த மருத்துவத்தில் குறை தைராய்டு, மிகை தைராய்டு நோய்க்கு நல்ல தீர்வுகள் உள்ளன. ஆனால் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது.

The post தைராய்டு பிரச்னைக்கு சித்தா தீர்வு! appeared first on Dinakaran.

Related Stories: