வாய்க்காலில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்-பாலம் கட்டித்தர கோரிக்கை

வடலூர் : குறிஞ்சிப்பாடி அருகே பாலம் இல்லாததால் 15 அடி ஆழமான வாய்க்காலில் மக்கள் இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. குறிஞ்சிப்பாடி அம்பேத்கர் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தினருக்கு கல்லறை தோட்டம் கே.கே. நகர் பகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்ல 15 அடி ஆழமான வாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளாக இப்படித்தான் இறந்த உடலை எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் வாய்க்காலில் பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாய்க்காலில் சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்-பாலம் கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: