பேரணாம்பட்டு அருகே 16ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த புலிகுத்தி ஆநிரை நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து குடியாத்தம் திருமகள் அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஜெயவேல் கூறியதாவது: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே வி.கோட்டா சாலையில் முருகர் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது தலைமையிலான குழு ஆய்வு செய்தபோது, பழமையான அரசமரமும், 16ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குறுநில ஆநிரை நடுக்கல் கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வீட்டிலும், பண்ணையிலும் வைத்திருப்பார்கள். காட்டில் உள்ள விலங்குகள் வேட்டையாட வரும்போது அதனை எதிர்த்து வெற்றி பெற்று இருப்பது போன்று கல் அமைக்கப்பட்டுள்ளது.

16ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்து குறுநில மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஆநிரை மீட்டெடுத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். ஆங்காங்கே இருக்கும் நடுகற்களை மாவட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டெடுத்து வருகின்றனர். அதனை வேலூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

The post பேரணாம்பட்டு அருகே 16ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: