உலக சந்தையில் நிலவும் மந்தமான சூழல் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவூதி அரேபியா முடிவு

சவூதி அரேபியா : சவூதி அரேபியா நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் மந்தமான சூழல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் குறைத்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக சவூதி அரேபியா அறிவித்து,மே மாதம் அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வியன்னாவில் நேற்று 7 மணி நேரம் நீடித்த ஒபெக் நாடுகள் கூட்டத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதால் ஜூலை மாதம் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக சவூதி அரேபியா எரிசக்தி துறை அமைச்சரும் இளவரசருமான Abdulaziz bin Salman அறிவித்துள்ளார். தேவைப்பட்டால் கச்சா எண்ணெயை உற்பத்தி குறைப்பை மேலும் நீட்டிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திடீர் அறிவிப்பால் ஜூலை மாதத்தில் சந்தையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பீப்பாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வர உள்ள வாரங்களில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் ஐக்கிய அமீரகம் கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருக்க எந்த தடையும் இல்லை என ஒபெக் நாடுகளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

The post உலக சந்தையில் நிலவும் மந்தமான சூழல் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவூதி அரேபியா முடிவு appeared first on Dinakaran.

Related Stories: