செம்மொழி பூங்காவில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு

சென்னை : சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. பெரியவர்களுக்கு ரூபாய் 15 மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் 10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த மலர் கண்காட்சியில் 2.5 லட்சம் கொய் மலர்களும், 250 கிலோ உதிரிப்பூக்களும் பயன்படுத்தப்பட்டு, யானை, பாரம்பரிய மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மலர்கண்காட்சியை காண விரும்புவோர் nhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வசதி செய்யப்பட்டது. கூட்டநெரிசலைத் தவிர்க்க, இணைய தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. பெரியவர்களுக்கு ரூபாய் 15 மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் 10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

மலர்கண்காட்சியை கடந்த 2 தினங்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுச் சென்றுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர். இன்று மாலையுடன் மலர்க்காட்சி நிறைவு பெற உள்ளது.

The post செம்மொழி பூங்காவில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: