மானாமதுரையில் மின்னல் தாக்கி மூதாட்டி பலி

மானாமதுரை, ஜூன் 5: மானாமதுரையில் அக்னி நட்சத்திரம் முடிந்தபின்னும் கடந்த ஐந்து நாட்களாக வெயில் கொளுத்தியது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து காத்து கொள்ள பகல் நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் பகலில் மோர், குளிர்பானங்கள், தர்பூசணி பழங்கள் ஜூஸ் ஆகியவற்றை வாங்கி தாகத்தை தீர்த்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலையில் வெயில் மீண்டும் உக்கிரமாக தகித்தது. மாலை 3 மணிக்கு வானத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டன. இடியுடன் பலத்த காற்று வீசத்துவங்கியது. இதில் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அப்போது மின்னல் தாக்கியதில் கொன்னக்குளம் வயல்காட்டில் புல் அறுக்க சென்ற கோபால் மனைவி கஸ்தூரி(62) சம்பவ இடத்தில் இறந்தார். இதுபற்றி தாசில்தார் ராஜா விசாரித்து வருகிறார்.

The post மானாமதுரையில் மின்னல் தாக்கி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: