தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகிற்கே இளையராஜா ஒரு புரட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இசை உலகிற்கே இளையராஜா ஒரு புரட்சி என இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: காலை பொழுது இனிதாய் மலர, பயணங்கள் இதமாய் அமைய, மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற, துன்பங்கள் தூசியாய் மறைய, இரவு இனிமையாய் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா. அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி. அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து ரசித்து, அவரை ‘இசைஞானி’ என போற்றினார் கலைஞர். இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கி சொக்கி கிடக்கும் ரசிகனாக, உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டி கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் ராஜாதான். வாழ்க நூறாண்டுகள் கடந்து. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகிற்கே இளையராஜா ஒரு புரட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: