கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழா 100அடி நீளம், 100 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்: சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

சென்னை:சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு 100 அடி நீளம் 100 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், திமுக கட்சி முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மறைந்த கலைஞரின் 100 வது பிறந்தநாள் விழா சாலவாக்கம் பஜார் பகுதியில் நேற்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.குமார் முன்னிலை வகித்தார். கிளைச்செயலாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவையொட்டி, கலைஞரின் நூறாவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 100 அடி நீளத்தில் 100 கிலோ எடை கொண்ட கேக்கை ஒன்றிய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த பிரமாண்ட கேக்கை மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெட்டி சிறியவர்கள், பெண்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் என அனைவருக்கும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஞானசேகர், தமிழ்வேந்தன், ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், பாபாஷரீப், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன்,

ஊராட்சிமன்ற தலைவர் சத்யா சக்திவேல், நிர்வாகிகள் துரை வேலு, கார்த்திகேயன், ரத்தினமாலா, சேகர், அன்புராஜ், சுப்பிரமணியன், நதியா கோபி, வெங்கட்ராமன், கோகுலகண்ணன், பலராமன், விஷ்ணு, அழகப்பன், நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்மராஜ், சுந்தரமூர்த்தி, கார்த்திகேயன், நாகம்மாள் மாரி, கோதண்டராமன், ஜெயகாந்தன், முரளி, கோமளா ஐயப்பன், முனுசாமி, சுப்பம்மாள் பெருமாள், பாலு, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள், மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தா நன்றி கூறினார்.

The post கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழா 100அடி நீளம், 100 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்: சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: