சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். கர்நாடக துணை முதல்வரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது. அதன்படி, மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும். அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்: அன்புமணி டிவிட் appeared first on Dinakaran.