பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் உயர் அழுத்த மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கத்திரி வெயில் முடிவைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஆர்.கே.பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றால் மரங்கள் சாய்ந்ததோடு, அம்மையார்குப்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உயர் அழுத்த மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அம்மையர்குப்பம் சுற்று வட்டார பகுதிகள் இருளில் மூழ்கின. மின் கம்பிகள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தி மின்சார சீரமைப்பு பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
The post ஆர்.கே.பேட்டை பகுதியில் கனமழை மின் தடையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.