திருவாடானை கோயிலில் பேவர் பிளாக் சாலை அமைக்க கோரிக்கை

 

திருவாடானை, மே 31: திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் சமேத சினேக வல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தெற்கு மாட வீதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் குண்டும் குழியுமாக பெயர்ந்து கிடக்கிறது. இந்த சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கோவிலின் சன்னதி தெருவில் பேவர் பிளாக் சாலையாக அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெற்கு மாட வீதி அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.இச்சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்றினால் போக்குவரத்துக்கு எளிமையாக இருக்கும். எனவே உடனடியாக பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என்றனர்.

The post திருவாடானை கோயிலில் பேவர் பிளாக் சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: