பசும்பொன்னில் மரக்கன்று நடுதல்

 

ராமநாதபுரம், மே 31: பசும்பொன் வந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் நேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவர் நினைவில்லத்தை சுற்றி பார்த்தார். பிறகு தியான மண்டபம் அருகே உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவர் கூறும்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு புகழ் சேர்த்ததில் கலைஞர் முதலாமவர்.

மணிமண்டபம் அமைத்தது, தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல திட்டங்களை தந்து சிறப்பாக கொண்டாடியது. தேவர் பெயரில் கல்லூரிகள் அமைத்தது என பல உள்ளன என்றார். இதில் வீட்டு வசதி வாரிய அரசு வழக்கறிஞர் ரவிந்திரநாத் ஜெயபாலன், கமுதி தெற்கு மாவட்ட செயலாளர் சசிக்குமார், மதுரை பகுதி செயலாளர் சுதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கொடி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

The post பசும்பொன்னில் மரக்கன்று நடுதல் appeared first on Dinakaran.

Related Stories: