தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ராமேஸ்வரம், மே 31: ராமேஸ்வரத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ராமேஸ்வரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதை நகர்மன்ற தலைவர் நாசர்கான் துவங்கி வைத்தார். மூன்று மருத்துவர்கள் நான்கு செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களை பரிசோதனை செய்தனர்.

இதில் தூய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் 140க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர். இறுதியாக தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நகர்மன்ற தலைவர் மளிகை பொருட்கள் வழங்கினார்.

The post தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: