கார் விபத்தில் இளம்பெண் பலி

 

திருமங்கலம், மே 31: கள்ளிக்குடி அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த மற்றொரு விபத்தில் காரில் சென்ற இளம்பெண் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(32). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை சந்தியா(22). இவரது தோழி நெல்லை டவுனை சேர்ந்த புவனா(22). நேற்று முன்தினம் மாலை மதுரை வந்து விட்டு சந்தோஷ்குமார், காரில் சந்தியா, புவனாவுடன் விருதுநகர் நோக்கி சென்றார்.

கள்ளிக்குடியை அடுத்துள்ள விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தினை முந்த சந்தோஷ்குமார் முயலும் போது குறுக்கில் டூவிலர் வரவே அதன் மீது மோதாமல் இருக்க காரினை சாலையின் இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் கார் மோதியது. இதில் சந்தோஷக்குமார், புவனா, சந்தியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

The post கார் விபத்தில் இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: