விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி தேரோட்ட முன்னேற்பாடு பணி துவக்கம்

விராலிமலை, மே 30: விராலிமலை முருகன் கோயில் தேரோட்டம் திருவிழாவின் தொடக்கப் பணியான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. விராலிமலை முருகன் மலைக்கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றம் மலைக்கோயில் சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கடந்த மே, 25ம் தேதி மங்கள வாத்தியங்கள் இசைத்து வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் ஓம் எழுத்து பொறிக்கப்பட்ட கொடியை
கொடிமரத்தில் ஏற்றிவைத்து வைகாசி விழாவை தொடங்கி வைத்தனர்.இதனை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, மாலை என இருவேளைகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 2ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

தேரோட்ட விழாவின் தொடக்க நிகழ்வான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி முருகன் எழுந்தருளும் திருத்தேரின் மையத்தில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், கணேச குருக்கள், வடுகபட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் கோயில் ஊழியர்கள், விழாக்குழுவினர் பங்கேற்றனர்.

The post விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி தேரோட்ட முன்னேற்பாடு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: