ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த பஸ் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்களுடன் நாளை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சென்னை: அரசுப் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குதல் போன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நேற்று மாலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில இடங்களில் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை இறங்கிவிட்டு, பஸ் இனிமேல் போகாது அனைவரும் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் பேருந்துகளை பணிமனைகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கினர். பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதற்கிடையே போராட்டம் நடத்தும் ஊழியர்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பஸ்கள் மீண்டும் இயங்கின. நாளை அனைத்து தொழிற்சங்கங்களுடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளதாக தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

The post ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த பஸ் ஸ்டிரைக்: தொழிற்சங்கங்களுடன் நாளை அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: