போரூரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் போரூர், காரம்பாக்கத்தில் உள்ள போரூர் வட்டார நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், தமிழக மக்களின் நலன் கருதி, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்கள் பாதிக்காத வகையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் ஒன்றிய அரசின் அணுகுமுறையை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது.

சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு விமான முனையத்தில் காமராஜரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க வேண்டும். மேலும், காந்தி மண்டபம் அருகே சுதந்திர போராட்ட தியாகிகளான வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி, மருதுபாண்டியர்களுக்கு முழு உருவச் சிலைகளும், மார்பளவிலான சங்கரலிங்கனாரின் சிலையை மாற்றி முழு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post போரூரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: