இந்தியாவில் 2027ம் நிதியாண்டிற்குள் நாள்தோறும் 100 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறும் : ஆய்வில் கணிப்பு!!

மும்பை : இந்தியாவில் 2026 – 2027ம் நிதியாண்டிற்குள் நாள்தோறும் 100 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறும் அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வளர்ந்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாள்தோறும் நடைபெறும் சில்லறை வர்த்தகத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் 75% ஆக இருக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையானது வரும் 2026 -2027 நிதியாண்டிற்குள் 90% அளவுக்கு உயரும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு நிதியாண்டில் 8,300 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் 2027ம் ஆண்டிற்குள் 37,000 கோடி பரிவர்த்தனைகளை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அது நாள் ஒன்றுக்கு 100 கோடி பரிவர்த்தனைகள் என்ற அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல கிரெடிட் சேவையும் வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் கிரெடிட் கார்டு வளர்ச்சி 21% ஆகவும் அதனை ஒப்பிடும்போது டெபிட் கார்டுகளின் வளர்ச்சி வெறும் 3% ஆக மட்டும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் 2027ம் நிதியாண்டிற்குள் நாள்தோறும் 100 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறும் : ஆய்வில் கணிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: