முழு கொள்ளளவை எட்டிய ஈளாடா தடுப்பணை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கோத்தகிரி: கோத்தகிரியின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஈளாடா தடுப்பணை நிரம்பி முழு கொள்ளளவுடன் காட்சியளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோடநாடு, கெரடாமட்டம், கர்சன், கைக்காட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அவ்வப்போது மிதமானது முதல் சாரல் பெய்து வந்தது. இதனால் கோத்தகிரியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள ஈளாடா தடுப்பணை கோடை காலத்திலும் முழு கொள்ளளவை எட்டியே காட்சியளிக்கிறது.

இதனால் கோத்தகிரி அதனை சுற்றியுள்ள எஸ்.கைக்காட்டி, கக்குளா, ஓம் நகர், புதூர், டானிங்டன், கேர்பெட்டா, இடுகொரை, காக்கா சோலை, கேர்கம்பை உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் படுத்தக்கூடிய முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை எனவும், இந்த தடுப்பணையில் எதிர் வரும் காலங்களில் விவசாயத்திற்கு ஏற்ற நீர்வரத்து அதிகரித்து காணப்படும் எனவும் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எதிர் வரும் பருவமழை காலங்களிலும் அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post முழு கொள்ளளவை எட்டிய ஈளாடா தடுப்பணை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: