பெரம்பலூர் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 700 இடங்களுக்கு 4740பேர் விண்ணப்பம்

பெரம்பலூர்,மே27: பெரம்பலூர் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம்ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 700 இடங்களுக்கு 4740பேர் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 30ம் தேதி நடக்கிறது என கல்லூரி முதல்வர் ரேவதி ெதரிவித்தார். பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி யில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக மேலாண்மையியல், சுற்று லாவியல், வரலாறு, சமூகப் பணிஆகிய 7கலைப்பிரிவு பட்ட வகுப்புகளும், கணி தம், இயற்பியல், வேதியி யல், நுண்ணுயிரியல், உயிர் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், கணி னி பயன்பாட்டியல் ஆகிய 7அறிவியல்பிரிவு பட்ட வகுப்புகளும் என மொத்தம் 14 இளநிலை பட்ட வகுப்புகள் உள்ளன.

இதில் 7 கலைப் பிரிவு பட்ட வகுப்புகளுக்கு தலா 60 இடங்கள் என 420 இடங்களும், 7 அறிவியல் பிரிவு பட்ட வகுப்புகளுக்கு தலா 40 இடங்கள் என 280 இடங்களும் என மொத்தம் முதலாமாண்டு சேர்க்கைக்கு 700 இடங்கள் உள்ளன.தமிழகஅளவில் கடந்த 8ம்தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொ டர்ந்து, தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப் படிப்பு முதலாம்ஆண்டு மாண வர் சேர்க்கைக்கான (2023- 2024) விண்ணப்பங்களை www.tngasa.in //www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவர் சேர்க் கைக்கு இணைய தளத் தின் மூலம் விண்ணப்பங் களைப் பதிவுசெய்த மாண வர்களின் தரவரிசைப் பட் டியல் அந்தத்தக் கல்லூரிக ளுக்கு 25ம்தேதி அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் 14 இளநிலை பட்டவகுப்புகளு க்கான 700 இடங்களுக்கு மொத்தம் 4,740 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களின் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக் கான கலந்தாய்வு(மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுதகுதி,முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, என் சிசி அடிப்படையில்) மே 30ம்தேதி நடைபெறுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை நடைபெறுகி றது என பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித் துள்ளார்.தேவையான சான்றுகள். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தங்களது 10,11,12 வகுப்புகளின் மதிப் பெண் சான்றிதழ்கள், டிசி- மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, ஆன் லைன் மூலம் விண்ணப் பித்த ரசீது, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் ஜெராக்ஸ் மற்றும் முன்னுரிமை சான் றுகள் ஆகியவற்றை கலந்தாய்வின்போது கொண்டு வர வேண்டும்.

The post பெரம்பலூர் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 700 இடங்களுக்கு 4740பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: