லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி

கோவில்பட்டி, மே 22: கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமிஅம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமிஅம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் கடந்த 18ம்தேதி தொடங்கி 28ம்தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடந்து வருகிறது.
இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. போட்டிகள் காலிறுதி வரை லீக் முறையிலும், அரைஇறுதி, இறுதி போட்டிகள் நாக்அவுட் முறையிலும் நடைபெறுகிறது.நான்காம் நாளான நேற்று (21ம்தேதி) காலை நடந்த 11வது லீக் ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும், பெங்களூரு ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் அணியும் மோதின. இதில் 3:2 என்ற கோல் கணக்கில் போலீஸ் அணி வென்றது. மாலையில் நடந்த 12வது லீக் ஆட்டத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், சென்னை சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் மோதின. இதில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வென்றது.

13வது லீக் ஆட்டத்தில் நியூடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், கோவில்பட்டி எஸ்டிஏடி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் மோதின. இதில் நியூடெல்லி அணி 4:3 என்ற கோல் கணக்கில் வென்றது. 14வது லீக் ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதின. இதில்செகந்திராபாத் அணி 5:2 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்று (22ம்தேதி) காலை பெங்களூர் ரயில் வீல் பேக்டரி அணியும், பாம்போஷ் நிஸ்வாஸ் ஹாக்கி அணியும் மோதுகின்றன. மாலையில் சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதுகின்றன. தொடர்ந்து நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதுகின்றன. பின்னர் பெங்களூரு கனரா வங்கி அணியும், புனே கஸ்டம்ஸ் அணியும் மோதுகின்றன.

The post லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: