சத்தியமங்கலத்தில் தனலட்சுமி சிறப்பு அங்காடி புதிய கிளை திறப்பு

சத்தியமங்கலம், மே.27: சத்தியமங்கலம் கடை வீதியில் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தனலட்சுமி சிறப்பு அங்காடியில் பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு உங்கள் தனலட்சுமி சிறப்பு அங்காடியின் புதிய கிளை பழைய நிர்மலா திரையரங்கு சாலையில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி தலைமை தாங்கினார். கடை உரிமையாளர் சத்தியமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சத்தி வட்டார தலைவரும், சத்தி கவர மகால் திருமண மண்டப அறக்கட்டளை தலைவருமான ச.மா.சிவகுமார் வரவேற்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தனலட்சுமி சிறப்பு அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வரலட்சுமி இளங்கோவன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி ஆனந்தராஜ், காரமடை நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.வி.சரவணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் முத்துக்குமார், திமுக மாநில விவசாய அணி இணை செயலாளர் தர்மலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம்,காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம்,

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், திருச்சி மாவட்ட தலைவர் கண்ணன்,கோபி முன்னாள் நகர் மன்ற தலைவர் நல்லசாமி, காரமடை நகர திமுக செயலாளர் வெங்கடேஷ்,இவிகே எஸ் சஞ்சய் சம்பத்,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் பி. செல்வம், ஊத்துக்குளி நிலக்கிழார் பி.எஸ். மணி உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். புதிய கடை திறப்பு விழாவை முன்னிட்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் பிரிவுகளில் டிவி, பிரிட்ஜ், கட்டில், பீரோ, குக்கர், கேஸ் அடுப்பு, மிக்சி, ஏசி, ஏர்கூலர்உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுபஸ்ரீ சிவகுமார், எழில் அன்பரசு சிவகுமார் மற்றும் தனலட்சுமி சிறப்பு அங்காடி பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post சத்தியமங்கலத்தில் தனலட்சுமி சிறப்பு அங்காடி புதிய கிளை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: