51 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஆத்தூர், மே 26: மல்லியக்கரை ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 51 பயனாளிகளுக்கு ₹44.25 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். மல்லியக்கரை ஊராட்சியில் நடப்பு நிதியாண்டில் ₹2.73 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வட்டார ஊராட்சியின் பொது நிதி சார்பில் ₹2.64 லட்சம் மதிப்பிலான பணிகளும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ₹4.20 லட்சம் மதிப்பிலான 3 பணிகளும், 15வது நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சி சார்பில் ₹5.50 லட்சம் மதிப்பிலான பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ₹3.78 லட்சம் மதிப்பிலான பணிகளும் மற்றும் புதியபள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு ₹2.70 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாமில்முகாமில் 51 பயனாளிகளுக்கு ₹44.25 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ‘‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4புதிய குடும்ப அட்டைகளும், நத்தம் பட்டா மாறுதல் 5 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 2 பயனாளிகளுக்கும், உட்பிரிவு தனிப்பட்டா 14 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு வங்கிக்கடனுதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் பரப்பு விரிவாக்கம் 4 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும், வேளாண்மை- உழவர் நலத்துறையின் சார்பில் நுண் பாசன திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தெளிப்பு நீர் கருவிகளும், சுகாதார துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண நிதியுதவிகளும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ₹44.25 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post 51 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: