வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது!: இறந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்து வழிபடும் கணவர்..!!

சிவகாசியில் 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனைவியின் நினைவாக சிலிக்கான் சிலை வைத்து குடும்பத்தினருடன் கணவர் நினைவு கூர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி நேஷனல் காலனியில் வசிக்கும் தொழிலதிபர் நாராயணன்(வயது 85). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்கடந்த 2015ம் ஆண்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். தற்போது ரூ.9 லட்சம் செலவில் தனது மனைவியின் முழு உருவ சிலிக்கான் சிலையை தத்ரூபமாக உருவாக்கி உள்ளார். சோபாவில் ஜோடியாக அமர்ந்த காட்சியை கண்டு பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர். பேரன், பேத்திகள் முன்பு மனைவியை வணங்கி முந்தியர் மகிழ்ந்தார்.

The post வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது!: இறந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்து வழிபடும் கணவர்..!! appeared first on Dinakaran.

Related Stories: