சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தருமபுர ஆதீனம் செந்தமிழ் சொக்கநாதருடன் பாதயாத்திரை

சீர்காழி, மே 26: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  சட்டைநாதர் கோயிலில், தையல்நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். மேலும் இக்கோயில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு பார்வதி அம்மாள் சிவபெருமான் நேரில் தோன்றி ஞானப்பால் வழங்கிய தளமாகும். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கடந்த 24ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பாதயாத்திரையாக தருமபுரம் ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் கடந்த 11ம் தேதி தருமபுர ஆதீனத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையை தொடங்கி சீர்காழிக்கு கடந்த 15ம் தேதி வருகை புரிந்தார்.

அப்போது வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் சீர்காழி தமிழ் சங்க தலைவர் மார்கோனி தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சட்டைநாதர் கோயிலில் தங்கி கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்ட தருமபுர ஆதீனம் 24ம் தேதி கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக முன்னின்று நடத்தி வைத்தார். இந்நிலையில் நேற்று மாலை சீர்காழி சட்டை நாதர் கோயிலில் இருந்து செந்தமிழ் சொக்கநாதருடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையாக சென்ற தருமபுர ஆதீனத்திற்கு வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

பாதயாத்திரையில் தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி கோயில் நிர்வாகி செந்தில் ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் மருந்தாளுநர் முரளி ஆசிரியர் கோவி.நடராஜன் தமிழக சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்ரமணியன், முன்னாள் ரோட்டரி தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தருமபுர ஆதீனம் செந்தமிழ் சொக்கநாதருடன் பாதயாத்திரை appeared first on Dinakaran.

Related Stories: