ஆலங்குடி அருகே கீழாத்தூர் பகுதியில் ரூ.12.40 கோடி மதிப்பில் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

ஆலங்குடி, மே 25: ஆலங்குடி அருகே கீழாத்தூர் பகுதியில் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டடத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கல்லூரி கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமானதாக வாங்கி கட்டட பணியை மேற்கொள்ள வேண்டும் என கட்டட ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கீரமங்கலம் அருகே உள்ள பனங்குளம் (வ) பாலம் பகுதியில் உள்ள பகுதி நேர அங்காடியில் திடீர் சோதனை மேற்கொண்டார் அப்போது பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களில் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து ஆலங்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆண்டு நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வைக்கு ஆய்வு மேற்கொண்டார்.

The post ஆலங்குடி அருகே கீழாத்தூர் பகுதியில் ரூ.12.40 கோடி மதிப்பில் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: