சட்டை நாதர் கோயில் கும்பாபிஷேகம்: புதுவை ஆளுனர் தமிழிசை, நீதிபதிகள் பங்கேற்பு

சீர்காழி, மே 25: சீர்காழி சட்டை நாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.இதில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆதிகேசவலு, சிவஞானம், செளந்தர், நாகை முதன்மை மாவட்ட நீதிபதி காந்தகுமார், கூடுதல் மாவட்ட நீதிபதி மணிவண்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா, சீர்காழி நீதிமன்ற சார்பு நீதிபதி மும்தாஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சோழவேந்தன், நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி, மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர் செல்வம், மயிலாடுதுறை எஸ்பி நிஷா, ஆர்டிஓ முருகதாஸ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல்ஜோதி தேவேந்திரன், சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜ்கமல், பாஜ மாவட்ட தலைவர் அகோரம், திமுக மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், மாவட்ட ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் டாக்டர்கள் முத்துக்குமார், அறிவழகன், மருதவாணன், கோயில் நிர்வாகி செந்தில், முன்னாள் ரோட்டரி தலைவர் கணேசன், சிற்பி மகாலிங்கம், முன்னாள் கவுன்சிலர் எஸ். எஸ். சம்பந்தம், சித்தமருத்துவர் ராஜாராமன் மற்றும் ஆதீனங்கள் தம்பிரான் சுவாமிகள், காவல்துறை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கோயிலின் நான்கு வீதிகளிலும் தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. சீர்காழி நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு கழிப்பறை குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. திருவாரூர் எஸ்.பி, சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி நிஷா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post சட்டை நாதர் கோயில் கும்பாபிஷேகம்: புதுவை ஆளுனர் தமிழிசை, நீதிபதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: