சட்டைநாதர் சுவாமி கோயிலில் சாமி சிலைகள் கிடைத்த இடம் வழிப்பாட்டு தலமாக மாற்றப்படும்

 

சீர்காழி, மே 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறும் நிலையில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறுகையில்,
சீர்காழி சட்டைநதார் சுவாமி கோயில் யாகசாலை பணிக்காக மண் எடுக்க பள்ளம் தோன்றிய போது 23 மூர்த்தங்கள், 642செப்பேடுகள் பொக்கிசமாக கிடைத்துள்ளது.ஒரு சிவாலயத்தில் உள்ள அனைத்து மூர்த்தங்களும் குபேர மூலையில் கிடைத்துள்ளது. அதிக அளவு செப்பேடுகள் வரலாற்றிலேயே முதன்முறையாக சீர்காழியில் கிடைத்துள்ளது.

செப்பேடுகளில் திருஞானசம்பந்தர் திருமுறைகள், திருநாவுக்கரசரின் தேவார திருப்பதிகங்கள் கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்திற்குப் பிறகு முழுமையாக பொக்கிஷங்கள் கிடைத்த களத்திலேயே அவை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மடம் சார்பில் செய்து தரப்படும். தெய்வவிக்கிரங்கள், செப்பேடுகள் கிடைத்த இடம் பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் வழிப்பாட்டு தலமாக மாற்றப்படும் என்றார். சிலை செப்பேடுகள் கிடைத்த இடத்தில் திருமுறை ஈன்ற தெய்வத் தமிழ் மண் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சட்டைநாதர் சுவாமி கோயிலில் சாமி சிலைகள் கிடைத்த இடம் வழிப்பாட்டு தலமாக மாற்றப்படும் appeared first on Dinakaran.

Related Stories: