சொதிக் குழம்பு

தேவையானவை:

தேங்காய் – 1,
பீன்ஸ் – 5,
கேரட் – 1,
உருளைக்கிழங்கு – 1,
முருங்கைக்காய் – 1,
எலுமிச்சை – 1,
உப்பு – தேவைக்கு.

அரைத்துக்கொள்ள:

பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
பச்சைமிளகாய் – 3,
சீரகம் – 1 டீஸ்பூன்,

வேகவைக்க:

பாசிப்பருப்பு – 20 கிராம்.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்து – 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
பெருங்காயம் – சிறிது,
தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்.

செய்முறை:

தேங்காய் துருவலை அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள விழுதில் நீர் ஊற்றி அரைத்து 2 மற்றும் 3 ம் பாலையும் எடுக்கவும். பீன்ஸை சிறிது நீளமாகவும், கேரட்டை வட்டமாகவும் நறுக்கவும். உருளை, முருங்கை, பீன்ஸ் போல நறுக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயம், காய்கறிகளையும் சேர்த்து வதக்கி அதனுடன் 3வது தேங்காய்ப் பாலை சேர்த்து வேக விடவும். காய் நன்கு வெந்தவுடன் அதில் இரண்டாம் பாலை ஊற்றி (வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம்) அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்க்கவும். கொதித்த பிறகு வேக வைத்த பருப்பு சேர்க்கவும். கடைசியாக முதலாம் பால் சேர்க்கவும். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். நன்கு ஆறிய பிறகு எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

The post சொதிக் குழம்பு appeared first on Dinakaran.