மண்வெட்டியால் தாக்கியவர் கைது பள்ளிகொண்டா அருகே தம்பி மனைவியை

பள்ளிகொண்டா, மே 23: பள்ளிகொண்டா அருகே அடகு வைத்த நகையை மீட்டு தராமல் அபகரித்ததை தட்டிகேட்ட தம்பி மனைவியை தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். பள்ளிகொண்டா அடுத்த கன்னிகாபுரம் கன்னி கோயிலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி கீதா(30). அண்ணாதுரை பிஎஸ்எப் ராணுவ வீரராக பணிபுரிந்த வந்த நிலையில் தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அண்ணாதுரையின் அண்ணன் முனிரத்தினம்(49) என்பவர் அவசர தேவைக்காக சில வருடங்களுக்கு முன்பு கீதாவிடம் 5 சவரன் நகையை கடனாக பெற்று அடகு வைத்துள்ளார்.

அதன்பிறகு நகையை மீட்டு தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால், முனிரத்தினம் நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அண்ணாதுரை இதுபற்றி அண்ணன் முனிரத்தினத்திடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைலகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மனைவி கீதா வந்தபோது ஆத்திரமடைந்த முனிரத்தினம் அருகிலிருந்த மண்வெட்டி எடுத்து கீதாவின் மண்டையை உடைத்துள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த கீதா பள்ளிகொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் கீதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் முனிரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மண்வெட்டியால் தாக்கியவர் கைது பள்ளிகொண்டா அருகே தம்பி மனைவியை appeared first on Dinakaran.

Related Stories: