நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற கலெக்டரிடம் மனு

 

நாகப்பட்டினம், மே23: நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ்பெற கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொறுப்பு ஷகிலா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு வந்தது. இதில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர்.

விவசாயிகளின் விளை நிலங்களையும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீர்வழிபாதைகளையும் கார்ப்ரேட் நிறுவனங்கள் தன் விருப்பத்திற்கு அபகரித்து கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டம் நிறைவேற்றினால் விவசாயிகளின் உரிமைகள் பறிபோகும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிர்வாக அதிகாரம் பறிக்கப்படும். காந்தி கண்ட கிராம ராஜ்யம் குழிதோண்டி புதைக்கப்படும். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டம் முறியடிக்கப்படும். எனவே இந்த தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

The post நில ஒருங்கிணைப்பு சட்டத்தை வாபஸ் பெற கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: