கும்பாபிஷேகத்தையொட்டி சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 2ம் கால யாக சாலை பூஜை

 

சீர்காழி, மே 22: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து 8 கால யாகசாலை பூஜைகளில் முதல் கால யாகசாலை நேற்று முன்தினம் தொடங்கியது. சுவாமி, அம்பாள், தோணியப்பர், சட்டைநாதர், முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று, 150 சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மூன்றாம் கால பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவர் மார்கோனி, கோயில் நிர்வாகி செந்தில், பெஸ்ட் கல்வி நிறுவனங்களில் தலைவர் ராஜ்கமல், மாவட்ட இந்து முன்னணி தலைவர் சரண்ராஜ், மாவட்ட பாஜக பிரசார அணி துணைத் தலைவர் சண்முகம், விஷ்வ இந்து பரிஷத் மண்டல நிர்வாகி செந்தில்குமார், தொழிலதிபர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பாபிஷேகத்தையொட்டி சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 2ம் கால யாக சாலை பூஜை appeared first on Dinakaran.

Related Stories: