கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டம், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும்

 

கோவை, மே 22: கோவை டாடாபாத் அருகே திமுக விவசாய அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாநில செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் தமிழ்மணி, இணை செயலாளர்கள் அப்துல்காதர், கள்ளப்பட்டி மணி, முத்துராமலிங்கம், குறிச்சி என் சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒராண்டிற்கு முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகிகளை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாய அணி நிர்வாகிகள் முன்வைத்தனர்.

இதில், மாநில செயலாளர் விஜயன் பேசியதாவது: கலைஞரின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3-ம் தேதி துவங்கி அடுத்த ஆண்டு ஜூன் வரை நடக்கிறது. இதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, சென்னையில் நடக்க உள்ள பொதுக்கூட்டம், ஜூன் 20-ம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் நடக்கிறது. இதில், நம் விவசாய அணியின் சார்பில் திரளாக பங்கேற்க வேண்டும். தொடந்து நம் அணியின் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். விவசாய அணி மிக சிறந்த அணியாக கொண்டு வரப்படும். மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்த பிறகு எது போன்ற செயல்பாடுகளில் நாம் ஈடுபடுவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டம், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரளாக பங்கேற்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: