திண்டுக்கல் விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவி

 

திண்டுக்கல் மே 20: திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பவர் டில்லரை மானியத்தில் பெறலாம். விளை நிலங்களில் பண்ணை வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க பவர் டில்லர் இயந்திரம் பெரும் பங்கு வகிக்கிறது.

இதில் பவர் டில்லர் மானியமாக 50 சதவீதம் ரூ.85,000 சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கும், 40 சதவீதம் ரூ.70,000 இதர விவசாயிகளுக்கும் மானியத்தில் பவர் டில்லர் வழங்கப்படுகிறது. மேலும், கூடுதலாக 20 சதவீத மானியம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பாக அறிய திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் அலைபேசி 9952612471 எண்ணிலும், பழனி உதவி செயற் பொறியாளர் அலைபேசி 9842129504 எண்ணிலும், கொடைக்கானல் உதவி செயற் பொறியாளர் அலைபேசி 8248168906 எண்ணிலும் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவி appeared first on Dinakaran.

Related Stories: