நில அபகரிப்பு முறைகேடு புகாரில் ஆந்திர மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை முடக்கி ஜெகன் மோகன் அரசு நடவடிக்கை!!

ஹைதராபாத் : நில அபகரிப்பு முறைகேடு புகாரில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களா மற்றும் முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்துக்களை ஜெகன் மோகன் அரசு முடங்கியுள்ளது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந் போது, அமராவதியை தலைநகராக அறிவித்து, இதற்காக விவசாயிகளிடம் இருந்து ரூ.34,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன், சந்திரபாபு, முன்னாள் அமைச்சர் நாராயணா மற்றும் சந்திரபாபுவின் உறவினர்கள் பெரும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி வந்தார்.

இது குறித்து சிறப்பு விசாரணை அமைப்பை ஜெகன் மோகன் அரசு அமைத்த நிலையில், நில அபகரிப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் விசாரணை அமைப்பு ஒப்படைத்தது. அதில் அமராவதியை மையப்புள்ளியாக வைத்து தெலுங்கு தேசம் கட்சி ஊழல் செய்ததாகவும் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணா ஆகியோர் பெருமளவில் நிலங்கள் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கிருஷ்ணா நதிக்கரையை யொட்டி உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டப்பட்ட பங்களாவை லிங்கமனேனி ரமேஷ் என்பவர் சந்திரபாபுவுக்கு இலவசமாக வழங்கியதாகவும் இந்த பங்களா வாடகைக்காக பொது நிதியில் இருந்து சந்திரபாபு நாயுடு வீட்டு வாடகை பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லிங்கமனேனி குடும்பத்தினர் சந்திரபாபுவுக்கு வழங்கிய பங்களாவையும் முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்துக்களையும் ஜெகன் மோகன் அரசு முடங்கியுள்ளது.

The post நில அபகரிப்பு முறைகேடு புகாரில் ஆந்திர மாஜி முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை முடக்கி ஜெகன் மோகன் அரசு நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: