தஞ்சையில் 22ம்தேதி நடக்கிறது கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்

 

தஞ்சாவூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி வருகிற 22ம்தேதி தஞ்சையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு, வனத்துறை சார்பில் உலகில் அழிந்துவரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசுவினைக் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் கடற்பகுதிகளில் இவ்வுயிரினம் கண்டறியப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும், உலக கடற்பசு தினமான மே 28ம் நளை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான போட்டி வரும் 22ம் தேதிகாலை 10 மணி முதல் 12 மணி வரை தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் பயிலும் 8, 9, 10 வகுப்பு மாணவர்கள் முதல் பிரிவாகவும். 11. 12 வகுப்பு மாணவர்கள் இரண்டாம் பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் மூன்றாம் பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிற்கும் தலா மூன்று பரிசுகள் என முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000. மூன்றாம் பரிசு ரூ.2000 என்று ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.10,000 வீதம் மூன்று பிரிவிற்கும் சேர்த்து கூடுதல் பரிசுத்தொகையாக ரூ.30,000 வழங்கப்படவுள்ளது.

போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக்கு வரைவதற்குரிய அட்டைகள்துறை மூலம் வழங்கப்படும். இதர வரைவு உபகரணங்கள் பென்சில், வண்ணக்கலவைகள் போன்றவற்றை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, பரிசளிப்பு விழா, இடம் முதலிய விவரங்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மேற்கொண்டு வருகிறார். இந்த போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சையில் 22ம்தேதி நடக்கிறது கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: