4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் உ.பி.யில் 2 தொகுதிகளையும் அப்னா தளம் கைப்பற்றியது: ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், மேகாலயாவில் யூடிபி வெற்றி

புவனேஷ்வர்: உத்தரப்பிரதேசத்தில் 2 தொகுதிகள், ஒடிசா, மேகாலயாவில் தலா ஒரு தொகுதியில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் சான்பே தொகுதியில் பாஜ கூட்டணி கட்சியான அப்னா தளம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரிங்கி கோல் 9,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சான்பே தொகுதியை கைப்பற்றினார். இதேபோல் சவுர் சட்டமன்ற தொகுதியைும் அப்னா தளம் கைப்பற்றியுள்ளது.

அப்னா தள வேட்பாளர் ஷபீக் அகமத் அன்சாரி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். ஒடிசாவின் ஜார்சுகுடா தொகுதியில் ஆளும் பிஜூ ஜனதா தள வேட்பாளர் திபலி தாஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளரை காட்டிலும் திபலி தாஸ் 48,721 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேகாலயாவில் சோஹியோங் தொகுதியில் என்பிபி கட்சி வேட்பாளரை வீழ்த்தி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சின்ஸ்ஷார் குபார் ராய் தாபா கைப்பற்றியுள்ளார். சின்ஸ்ஷார் 16,600 வாக்குகளையும், என்பிபி வேட்பாளர் 13,200 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

The post 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் உ.பி.யில் 2 தொகுதிகளையும் அப்னா தளம் கைப்பற்றியது: ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், மேகாலயாவில் யூடிபி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: