விதிகளை மீறிய கிரானைட் கொள்ளை; உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: விதிகளை மீறி நடைபெறும் கிரானைட் கொள்ளை குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மற்றும் கருங்கற்கள் விதிகளை மதிக்காமல் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, கனிமக் கொள்ளை தொடர்பாக அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பியுள்ளது.

சட்டவிரோதமாக கிரானைட் உள்ளிட்ட கனிமங்களை வெட்டி எடுத்த நிறுவனங்களுக்கு ரூ.321.81 கோடி தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது. ஆனால், அதை சற்றும் மதிக்காமல் கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் செயல்படுவது மன்னிக்க முடியாத குற்றம். கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும், அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post விதிகளை மீறிய கிரானைட் கொள்ளை; உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: