மயிலாடுதுறை, மே 12: மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ம்தேதி நடைபெற உள்ளது கலெக்டர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறை அலுவலர்களை கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் 19ம்தே காலை 11 மணி அளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறும். அடையாள அட்டைக்கு மேலும், இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போட்டோ 1, கைப்பேசி எண், ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
The post மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.
