கேரள ரயில் எரிப்பில் 3 பேர் பலி டெல்லியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

புதுடெல்லி: கேரள மாநிலத்தில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கு தொடர்பாக ஷாகின்பாக் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 2ம் தேதி ஆலப்புழா கண்ணூர் எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இந்த சம்பவத்தில் 2 சிறுவர்கள், ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். டெல்லி ஷாகின்பாக்கை சேர்ந்த ஷாரூக் சைபி என்ற வாலிபர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவத்தில் தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு இருப்பது வௌிச்சத்துக்கு வந்துள்ளதால் இதுகுறித்த விசாரணை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி ஷாகின்பாக் பகுதியில் ஷாரூக் சைபியின் வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

* காஷ்மீரில் 11 இடங்களில் என்ஐஏ சோதனை
தீவிரவாதத்தை ஆதரித்து வந்ததால் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு கடந்த 2019ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட இந்த தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். பத்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் 11 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கேரள ரயில் எரிப்பில் 3 பேர் பலி டெல்லியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: