அதிமுக, அமமுகவில் இருந்து விலகிய தொண்டர்கள் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

‘நாகப்பட்டினம்,மே10: நாகப்பட்டினத்தில் அதிமுக, அமமுகவில் இருந்து விலகிய தொண்டர்கள் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா நாகப்பட்டினத்தில் நடந்தது. விழாவிற்கு நாகப்பட்டினம் நகர செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் ஆகியோர் முன்னிலையில் அதிமுக, அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது அமைச்சர் பேசியதாவது: ஜனநாயகத்தின் பாதுகாவலர், சுயமரியாதையின் பாதுகாவலர் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரையும் சொல்லி கொண்டு போகலாம்.
இந்தியநாடு எங்கு நோக்கி பயணம் செய்கிறது. ஆனால் தமிழ்நாடு ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை நோக்கி செல்கிறது. இதனால் தான் உலகில் உள்ள மற்ற அரசியல் தலைவர் தமிழ்நாடு முதல்வரை நாடி வருகின்றனர்.
அனைத்து ஜாதி, அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக திகழும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்மண் பகுத்தறிவு மண். ஜனநாயகத்தை பாதுகாக்கா நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற வேண்டும். அப்போது தான் பாசிச சக்திகளை முறியடிக்க முடியும் என்றார்.

ரூ.4.97 கோடியில் தூர்வாரும் பணி நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, முதல்வர் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் விரைந்து செல்ல தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பில் 46 பணிகள் 378 கிலோமீட்டர் தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் வரை மற்றும் தெத்தி வடிகால் வாய்க்கால் 3 கிலோமீட்டர் தூரம் வரை என ரூ. 16 லட்சம் மதிப்பில் மண்வாரி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் 12 ஆயிரத்து 85 ஏக்கர் பாசன பரப்பு பயன் பெறும் என்றார்.

The post அதிமுக, அமமுகவில் இருந்து விலகிய தொண்டர்கள் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: