சுருளியில் ஒருங்கிணைப்பு விழா

 

கம்பம், மே 10: கம்பம் அருகே உள்ள சுருளியில் தென் மாவட்ட முன்னாள் இராணுவத்தினர் 11வது என்ஜினியரிங் பிரிவு கூட்டமைப்பு முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்ஆர்டி சேர்மன் இராசு தலைமை தாங்கினார். தலைவர் சுலைமான் முன்னிலை வகித்தார். எம்ஆர்டி தேனி மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினார். வீராச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொதுச்செயலாளர் ஆரோக்கியம், பாலாஜி, துவக்க உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உட்பட15 மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் இராணுவத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்தும், பாதிக்கப்பட்ட முன்னாள் இராணுவத்தினருக்கு உதவுதல், முன்னாள், இன்னாள் இராணுவ வீரர்களுக்கு வீட்டு வரிவிதிப்பில் விலக்கு வேண்டி அரசிடம் மனு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை மாவட்ட பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post சுருளியில் ஒருங்கிணைப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: