நடவடிக்கை எடுக்க கோரிக்கை இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவுதினம் அனுசரிப்பு

காரைக்கால்,மே9: இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்காலில் பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் பிரெஞ்சு துணை தூதர், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. 1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களின் 78வது நினைவு தினம் நேற்று காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவிடத்தில் பிரெஞ்சு தூதரகம் சார்பில் புதுச்சேரிக்கான பிரெஞ்ச் நாட்டு துணை தூதர் இமானுவேல், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் ஆகியோர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தியா, பிரெஞ்ச் ஆகிய இருநாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டது மேலும் ஒரு நிமிடம் இறந்த போர் வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது பிரெஞ்சு குடியுரிமை மற்றும் இந்திய குடியுரிமை பெற்ற பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

The post நடவடிக்கை எடுக்க கோரிக்கை இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவுதினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: