கல்வி, வேலை வாய்ப்பில் சிறந்து விளங்கும் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி

பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திரவியல் பொறியியல், கட்டிட பொறியியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முதுகலை பொறியியல் பட்டப் படிப்புகளான பொறியியல் வடிவமைப்பு, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் போன்ற பிரிவுகளுடன் செயல்படுகிறது. இந்த கல்வி குழுமம் சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, நங்கநல்லூர், பிரின்ஸ் ஸ்ரீ வாரி வித்யாலயா சென்ட்ரல் போர்டு, நங்கநல்லூர், பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், பிரின்ஸ் ஸ்ரீ வாரி வித்யாலயா சென்ட்ரல் போர்டு, மடிப்பாக்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம் பிரின்ஸ் வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கௌரிவாக்கம், பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பொன்மார், ஆகியவற்றுடன் சேர்ந்து வழங்கி வருகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கல்லூரியின் மற்ற துறைகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளுடன் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. இங்கு பயின்றவர்கள் பலர் முன்னிலை வகிக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சென்னை (IITM) இன்குபேஷன் சென்டர் மற்றும் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுள்ளது.

The post கல்வி, வேலை வாய்ப்பில் சிறந்து விளங்கும் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி appeared first on Dinakaran.

Related Stories: