அரூர் வனப்பகுதியில் வேகத்தடை அமைப்பு

 

அரூர், மே 8: அரூர்- கடத்தூர் சாலையில் உள்ள வனப்பகுதியில், ஏராளமான மான், முயல், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. இங்கு வனத்தின் ஒரு பகுதியிலிருந்து, மற்றொரு பகுதிக்கு அடிக்கடி விலங்குகள் சாலையை கடக்கின்றன. அவ்வாறு சாலையை கடக்கும் நேரங்களில், வாகனங்களில் சிக்கி வனவிலங்குகளுடன் மனிதர்களும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் அதிகமாக சாலையை கடந்து செல்லும் இடங்களாக, 2 இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வரும் காலங்களில் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அரூர் வனப்பகுதியில் வேகத்தடை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: