சிவகங்கை, மே 6: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட்ஸ் வங்கியின் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2022 & 2023ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிகளிலேயே வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் போஸ்ட் மேன்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி வங்கிக்கணக்கு துவங்கிக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அஞ்சலகம் மூலம் வங்கி கணக்கு தொடங்க வாய்ப்பு appeared first on Dinakaran.
