நகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணி

விருதுநகர், மே 5: விருதுநகர் பாவாலி ரோட்டில் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் 520 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் 12 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவ, மாணவியர் இடநெருக்கடியால் சிரமப்பட்டு வந்தனர். எனவே பள்ளித் தலைமை ஆசிரியர் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து விருதுநகர் நகராட்சி கல்வி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிலையில் நேற்று அப்பள்ளியில் கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.
இப்பணியை விருதுநகர் எம்.எல்.ஏ.சீனிவாசன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், துணைத் தலைவர் தனலெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாத்திமுத்து, மதியழகன், சுல்தான் அலாவுதீன், பால்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post நகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணி appeared first on Dinakaran.

Related Stories: