மல்யுத்த வீரர்களுக்கு அநீதி குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதே பாஜவின் அடையாளம்: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடி தந்த நமது மற்போர் (மல்யுத்தம்) வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியை கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதை பற்றி நமது பிரதமர் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார். ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு என பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்கு தொல்லையளிப்பதும், குற்றம் சாட்டப்பட்டோரை பாதுகாப்பதுமே பாஜவின் அடையாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மல்யுத்த வீரர்களுக்கு அநீதி குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதே பாஜவின் அடையாளம்: மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: