பரமத்திவேலூர், ஏப்.29: பரமத்திவேலூரை அடுத்த கபிலர்மலை கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (41). இவர் அதே பகுதியில் தேங்காய் நார்மில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று மாலை, லாரி ஒன்றில், இருக்கூர் பகுதியில் இருந்து தேங்காய் நார்களை ஏற்றி கொண்டு கபிலக்குறிச்சி செல்ல, வலசுப்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் இருந்த மின்கம்பியில் உரசியதில், திடீரென லாரியில் இருந்த தேங்காய் நார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனையறிந்த டிரைவர் உடனடியாக லாரியை சாலையோரத்தில் நிறுத்தினார். இது குறித்து அப்பகுதி மக்கள், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். ஆனால், அதற்குள் லாரியில் இருந்த தேங்காய் நார் முழுவதும் எரிந்தது.
The post தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் தீ appeared first on Dinakaran.
